Full screen yellow heart particles black screen template
Please scroll down to end get fileCHROMA KEY
வீடியோவின் background ஐ அளிக்க இந்த chroma key ஆப்ஷன் பயன்படுகிறது. வீடியோவின் background ஒரே கலராக இருந்தாள் சுலபமாக நீக்க முடியும். உதாரணமாக வீடியோவின் background பச்சை நிறத்தில் இருந்தால் remove செய்வதற்கு எளிதாக இருக்கும்.வீடியோவின் கலர் எது என்று தெரிந்து கொண்டு remove செய்யும்போது key colour அதே கலராக செலக்ட் செய்ய வேண்டும். அப்போதுதான் வீடியோவின் பின்புற பேக்ரவுண்ட் ரிமூவ் செய்ய முடியும்
VOICE RECORDI
வீடியோவை எடிட் செய்யும்போது தேவையான இடத்தில் உங்களது குரலை பதிவு செய்ய இந்த செயலியில் அதற்கான அம்சமும் உள்ளது. குரலைப் பதிவு செய்வதற்கு கூகுள் ப்ளே ஸ்டோரில் பல செயலிகள் உள்ளது. இருப்பினும் உங்களது வீடியோக்களை நீங்கள் எடிட் செய்யும்போதே voice record செய்வதற்கு இந்த செயலியில் அம்சம் உள்ளது
HANDWRITI
இந்த அம்சம் மூலம் உங்களது வீடியோக்களில் தேவையான இடத்தில் சில குறியீடுகளை அமைக்க முடியும். இதனால் உங்களது வீடியோக்களை பார்க்கும் பார்வையாளர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது குறியீடு மூலம் காட்டும்போது அவர்களுக்கு எளிதாக புரியும்
VOICE CHANG
உங்களது உண்மையான குரலை மாற்றவும் அல்லது வீடியோவில் உள்ள பிற குரலை வேறு குரலாக மாற்றவும் இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. உதாரணமாக உங்களது குரலை robot பேசினால் எப்படி இருக்குமோ அதுபோன்று மாற்றவும் இந்த செயலியில் அம்சங்கள் உள்ளது
EQ MOD
ஆடியோவில் விளைவுகளை ஏற்படுத்த இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. இதன் மூலம் உங்களது ஆடியோ கேட்பதற்கு தெளிவாக இருக்கும். உதாரணமாக கூறினால் rock, classic இதுபோன்ற ஆடியோ filter இதில் உள்ளது. இதை பயன்படுத்தும் போது உங்களது ஆடியோ கேட்க இனிமையாக இருக்கும்
PREMIUM COLOUR FILT
வீடியோ மற்றும் புகைப்படங்களில் கலரை பிடித்த மாதிரி மாற்றிக்கொள்ள இந்த colour filter ஆப்ஷன் பயன்படுகிறது. இதை பயன்படுத்திப் பார்த்தால் மட்டுமே அதன் அனுபவம் உங்களுக்கு தெரியும்
EXPORT QUALI
இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் edit செய்யும் வீடியோக்களை 4K 60fps வரை output எடுத்துக்கொள்ள முடியும். இதன் மூலம் வீடியோ பார்க்க தெளிவாக இருக்கும். உங்களுக்குப் பிடித்த format ல் வீடியோக்களை மாற்றிக் கொள்ளவும் முடியும். உதாரணமாக உங்களுக்கு 720p 30fps வரை போதும் என்றால் அந்த quality ல் வீடியோக்களை அவுட்புட் எடுத்துக்கொள்ளலாம்
SPEED CONTR
உங்களது வீடியோக்களை வேகமாக மற்றும் மெதுவாக இயக்க இந்த ஸ்பீட் கண்ட்ரோல் ஆப்சன் பயன்படுகிறது. இதன் மூலம் உங்களது வீடியோவை தேவையான இடத்தில் வேகமாக இயக்கவும் அல்லது மெதுவாக இயக்கவும் முடியும். இதை பயன்படுத்தி எடிட் செய்யும்போது பார்வையாளர்களை கவர்ந்து இழுக்க முடியும். ஏனென்றால் வேகமாக நடக்கும் நிகழ்ச்சியை மெதுவாக பார்க்கும் அனுபவம் புதிதாக இருக்கும்
MORE black screen video effect 1
VIDEO REVERSE MOD
ஒரு நிகழ்வை தொடக்கத்திலிருந்து பார்க்காமல் கடைசியிலிருந்து முதல் பகுதிக்கு மாற்றி பார்க்க இந்த ரிவர்ஸ் ஆப்சன் பயன்படுகிறது. உதாரணமாக உங்களுக்குப் புரியும் படி கூறினாள் ஒரு மிதிவண்டி சென்றுகொண்டிருக்கிறது அதை அப்படியே பின்புறமாக வரச்செய்யுவும் மற்றும் பழையபடியே அதை செயல்படுத்தவும் பயன்படும் ஆப்ஷன் video reverse option ஆகும்
CLIP GRAPHI
இந்த ஆப்ஷனை பயன்படுத்தி உங்களது வீடியோக்களின் நடுவில் புதிய விளைவுகளை ஏற்படுத்த முடியும். உதாரணமாக கூறினால் ஒரு வீடியோவை நடுவில் இரண்டாக கட் செய்திருந்தால் அந்த இடத்தில் ஒரு புதிய effect கொடுக்க முடியும். இதன் மூலம் ஒரு வீடியோவில் இருந்து மற்றொரு வீடியோவிற்கு மாறும்பொழுது நீங்கள் ஏற்படுத்திய effect நடுவில் இருக்கும். அப்பொழுது அந்த வீடியோவை பார்க்க அழகாக இருக்கும்
ROTATE AND MIRRORI
வீடியோ மற்றும் புகைப்படங்களை உங்களுக்கு ஏற்றார்போல் ஏற்ற திசைக்கு மாற்றிக்கொள்ள இந்த rotate and mirror option பயன்படுகிறது. உதாரணமாக கூறினால் உங்களது வீடியோ கிழக்கு திசையை பார்த்து இருந்தால் அதை மேற்கு மற்றும் உங்களுக்கு பிடித்த திசையில் மாற்றிக்கொள்ள இந்த ஆப்ஷன் பயன்படுகிறது.இதை உங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோவில் பயன்படுத்திக் கொள்ளலாம்
COLOUR ADJUSTME
உங்களது வீடியோ மற்றும் புகைப்படங்களில் கலர் கம்மியாக இருந்தால் உங்களது வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்க்கும்போது ஒரு தெளிவு இருக்காது.அப்படி இருக்கும் உங்களது வீடியோ மற்றும் புகைப்படங்களை இந்த கலர் அட்ஜஸ்ட்மெண்ட் ஆப்ஷனை பயன்படுத்தி தேவையான இடத்தில் contrast, level, brightness அட்ஜஸ்ட் செய்யும் போது பார்க்க ஒரு அளவுக்கு தெளிவாகவும் மற்றும் அழகாகவும் மாற்ற இந்த ஆப்ஷன் பயன்படுகிறது
VOLUME ENVELO
இந்த ஆப்ஷன் Kinemaster அப்ளிகேஷனை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல உதவியது எனலாம். ஏனெனில் இந்த ஆப்சன் கணினியில் எடிட் செய்வதற்கு மட்டுமே உள்ளது.ஆண்ட்ராய்டு செயலியில் அரிதாக காணலாம். இதன்மூலம் உங்களது வீடியோ மற்றும் ஆடியோவில் தேவையான இடத்தில் வால்யூம் அதிகப்படுத்தவும் தேவையற்ற இடத்தில் வால்யூம் முழுமையாக குறைக்கவும் முடியும்
VIGNET
இதைப் பயன்படுத்தி வீடியோ மற்றும் புகைப்படங்களின் கரையில் கருநீல ஷேடோ ஏற்படுத்தமுடியும்.இதனால் நடுவிலுள்ள அனைத்தும் தெளிவாக பார்க்க முடியும். இதற்காக இந்த ஆப்ஷன் பயன்படுத்துகிறோம். இது வீடியோவை தனித்துவமாக காட்ட உதவுகிறது
EXTRACT AUD
இதுவும் ஒரு சிறந்த அம்சம் எனக் கூறலாம்.ஏனெனில் வீடியோ எடிட் செய்யும் போது அந்த வீடியோவுக்காண பாடல் உங்களிடம் இல்லை என்றாலும் அந்த ஆடியோவிற்கான வீடியோ உங்களிடம் இருந்தால் அந்த வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரித்தெடுக்க முடியும்.நீங்கள் பாடல் டவுன்லோட் செய்யாமலே உங்களுக்கு தேவையான பாடலை தனியாக எடுத்துக்கொள்ள இந்த ஆப்ஷன் பயன்படுகிறது.